ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 4 மே 2023 (12:17 IST)

ரஷ்ய அதிபர் புதினை கொல்ல முயன்ற உக்ரைன்? – உக்ரைன் மக்களை கொன்று குவித்த ரஷ்யா!

நேற்று ரஷ்ய அதிபர் மாளிகை மீது நடந்த ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடியாக உக்ரைனின் கீவ் நகர் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாகி விட்ட நிலையில் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் உதவி வரும் நிலையில் உக்ரைன் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்து வருகிறது.

இந்நிலையில் நேற்று ரஷ்ய அதிபர் மாளிகை மீது தாக்குதல் நடத்த ட்ரோன்கள் பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக ரஷ்ய ராணுவம் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது. ரஷ்ய அதிபர் புதினை கொல்ல உக்ரைன் இதை செய்ததாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை உக்ரைன் மறுத்துள்ளது.

உக்ரைனுக்கு பதிலடி கொடுப்பதாக இன்று ரஷ்ய ராணுவம் உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள ரயில் நிலையம், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 21 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் இரு நாடுகளுக்கு இடையேயான போர் மேலும் வலுப்பெற்றுள்ளது.

Edit by Prasanth.K