செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (22:05 IST)

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை கொல்ல முயற்சி

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை கொல்ல முயற்சி நடந்துள்ள சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகிலுள்ள மிகப்பெரிய வல்லரசு நாடுகளில் ஒன்றாக ரஷியா உள்ளது. பல நாடுகளுக்கு எண்ணைய் ஏற்றுமதியில் முன்னணியிலுள்ளது.

இந்த நிலையில்,  உக்ரைன் மீது ரஷிய ராணுவம் படையெடுத்து தொடர்ந்து 7 மாதத்திற்கு மேலாகத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில்,  உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில்,  அதிபர் புதின் சென்ற கார் மீது மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு வீசியதாகவும்,  அந்தக் குண்டு வெடித்ததாகவும், ஆனால் அதிபர் புதினுக்கு பாதிப்பு ஏற்படாமல் தப்பித்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ரஷிய அதிபர் புதின், என்னைக் கொல்லை 5 முறை தாகுதல் நடந்துள்ளதாகத் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவரைக் கொல்ல6 முறை நடந்துள்ள முயற்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போர் நிறுத்திற்கு இந்தியா அனைத்து உதவிகள் செய்யும் என்று புதினை சந்தித்துள்ள பிரதமர் மோடி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.