இனி கூகுள் அக்கவுண்ட்களுக்கு பாஸ்வேர்டு தேவையில்லை. அதிரடி அறிவிப்பு..!
ஜிமெயில் உள்பட கூகுள் அக்கவுண்ட் களுக்கு பாஸ்வேர்ட் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இனிமேல் பாஸ்வேர்ட் தேவையில்லை என்றும் பாஸ்கீ மட்டும் இருந்தால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் கூகுள் அக்கவுண்டுகளுக்கு பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் பிங்கர் பிரிண்ட், பேஸ் அன்லாக், ஸ்கிரீன் லாக் போன்ற வசதிகளைக் கொண்டே கூகுள் அக்கவுண்ட்களை இயக்க முடியும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆனால் அதே சமயம் பாஸ்வேர்ட், டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன் போன்ற முந்தைய வழிகளிலும் கூகுள் அக்கவுண்ட்களில் பயனர்கள் சைன் இன் செய்ய முடியும் என்றும் கூகுள் விளக்கம் அளித்துள்ளது. இந்த புதிய அறிவிப்புக்கு கூகுள் பயனர்கள் பெரும் வரவேற்பை தெரிவித்து வருகின்றனர்
Edited by Siva