வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 19 மார்ச் 2022 (08:46 IST)

தீவிரமான பேச்சுவார்த்தைக்கு நேரம் வந்துவிட்டது! – ஜெலன்ஸ்கி அறிவிப்பு!

உக்ரைன் மீது ரஷ்டா போர் தொடர்ந்து கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நெருங்கிவிட்ட நிலையில் தீவிரமான பேச்சுவார்த்தைக்கு நேரம் வந்து விட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில் உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல நகரங்களில் ரஷ்யா தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் பல நகரங்களை கைப்பற்றியுள்ளது.

ரஷ்யாவின் குண்டு வீச்சு தாக்குதலால் பல இடங்களில் பதுங்கியிருந்த பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். பல மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு அடைக்கலம் தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைனும் முடிந்த அளவு எதிர்ப்பு தாக்குதலை நடத்தி வருகிறது.

தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி “ரஷியாவுடன் தீவிரமான பேச்சுவார்த்தை நடத்த நேரம் வந்துவிட்டது என்றார். நான் கூறுவதை அனைவரும் கேட்கவேண்டும். குறிப்பாக மாஸ்கோ. சந்திப்பு மற்றும் தீவிர பேச்சுவார்த்தை நடத்த நேரம் வந்துவிட்டது” என தெரிவித்துள்ளார்.