திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 18 மார்ச் 2022 (16:08 IST)

தனுஷின் வாழ்த்துக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ரியாக்‌ஷன்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பயணி இசை ஆல்பம் வெளியாகியுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார் தனுஷ்.

சமீபத்தில் தனுஷுடன் விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு சினிமாவில் மிகவும் பிஸியாக இயங்கி வருகிறார். அவரின் அடுத்த இயக்கமான நான்கு மொழிகளில் உருவாகியுள்ள பயணி ஆல்பத்தை தமிழில் ரஜினிகாந்த் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகளுக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நண்பர் ஐஸ்வர்யாவின் பயணி மியூசிக் ஆல்பம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று கூறி இருந்தார். இந்த டிவீட் இணையத்தில் வைரல் ஆனது. இதையடுத்து இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் ‘நன்றி தனுஷ்.. உங்கள் பயணம் சிறக்க தெய்வ அருள் கிடைக்கட்டும்’ எனக் கூறியுள்ளார்.