தொடர்புடைய செய்திகள்
- அமெரிக்கா ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: போர் பதட்டம் அதிகரிப்பு!
- திருமணத்திற்கு முந்தைய நாள் திடீரென அமெரிக்கா பறந்த மணமகள்: காரணம் கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்
- 290 மறக்க வேண்டாம்: டிரம்புக்கு ஈரான் அதிபர் வார்னிங்!!
- சுலைமானி இறுதி ஊர்வலத்தில் நெரிசல்... 35 பேர் பரிதாப பலி
- அமெரிக்கா - இரான் இடையே போர் வெடித்தால் இந்தியா எப்படி பாதிக்கப்படும்?
ஈரானில் விமான விபத்து: 180 பயணிகள் கதி என்ன? விபத்தா? தாக்குதலா?
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஈரான் மீது அமெரிக்க ட்ரோன் படைகள் தாக்குதல் நடத்தியதால் சுலைமானி என்ற ஈரானின் முக்கிய தளபதி கொல்லப்பட்டார். இதனை அடுத்து இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று அதிகாலை 12 ஏவுகணைகளை ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் ஈரானில் உக்ரைன் நாட்டின் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்த விமானத்தில் சென்ற 180 பயணிகளின் கதி என்ன? என்பது இதுவரை தெரியவில்லை
ஈரான் விமான நிலையத்தில் இருந்து உக்ரைன் நாட்டின் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும்,ம் இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் ஈரான் விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதட்டமான சூழல் நிலவும் நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதால் இது உண்மையாகவே விபத்தா? அல்லது தாக்குதலால் ஏற்பட்டதா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது
