வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 7 ஜனவரி 2020 (18:16 IST)

290 மறக்க வேண்டாம்: டிரம்புக்கு ஈரான் அதிபர் வார்னிங்!!

52 என்ற எண்ணை குறிப்பிடுபவர்களுக்கு 290 என்ற எண்ணும் நினைவிருக்க வேண்டும் என ஈரான் அதிபர் டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
ஈராக் தலைநகர் பாக்தாத் விமானநிலையத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய ராக்கெட் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சுலைமானி மற்றும் துணை ராணுவ தளபதி உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டனர். இது மத்திய கிழக்கு நாடுகளில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என ஈரான், ஈராக் அரசுகளும் வெளிப்படையாகவே அறைகூவல் விடுத்து வருகின்றன. 
 
இதற்கு பதலளிக்கும் வகையில் தனது அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பதில் தாக்குதல் நடத்தும் விதமாக அமெரிக்கா சொத்துகள் மீது ஈரான் தாக்குதல் நடத்த போவதாக பேசிக் கொண்டிருக்கிறது. அப்படி ஏதாவது செய்ய நினைத்தால் ஈரானின் முக்கியமான 52 இடங்களில் தாக்குதலை நடத்துவோம் என எச்சரித்துள்ளார்.
 
தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 52 என்ற எண்ணை குறிப்பிடுபவர்களுக்கு 290 என்ற எண்ணும் நினைவிருக்க வேண்டும். ஒருபோதும் ஈரான் நாட்டிற்கு மிரட்டல் விடுக்க வேண்டாம். #ஐஆர் 655 என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
அதாவது அமெரிக்க அதிபர் குறிப்பிட்ட 52, 1979 ஆம் ஆண்டு நடந்த நிகழ்வாகும். அதேபோல ஈரான் அதிபர்  குறிப்பிட்ட 290 1988 ஆம் ஆண்டு நடந்த தாக்குதல் ஆகும். இது போன்று அமெரிக்கா – ஈரான் இடையேயான வெளிப்படையான இந்த தாக்குதல் அறைகூவல் உலக நாடுகளிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.