முன்னாள் ஆணையர் ஜார்ஜ்-க்கு சம்மன்....
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க முன்னாள் ஆணையர் ஜார்ஜுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஜெ.வின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. 4 மாதங்களுக்கும் மேல் அவர் பலரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தமிழக முன்னாள் ஆணையர் ஜார்ஜுக்கு முதன் முறையாக ஆறுமுகச்சாமி சம்மன் அனுப்பியுள்ளார். வருகிற 13ம் தேதி விசாரணை ஆணையத்தில் அவர் ஆஜராக வேண்டும் என அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ஜெ.வின் உதவியாளர் பூங்குன்றன் மற்றும் ராமலிங்கம் ஆகியோர் மீண்டும் வருகிற 16ம் தேதியும், அப்போலோ மருத்துவர்கள் விக்ரம் ராஜ், மாதங்கி ஆகியோர் 14ம் தேதியும் ஆஜராக வேண்டும் என அவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.