1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 7 மார்ச் 2023 (23:03 IST)

ரோமில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

italy
ரோம் நகரில் விமானப்படை வீரர்கள் வானில் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கின.

இத்தாலி நாட்டில் பிரதமர் ஜார்ஜியா மெலோனி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இன்று ரோம் நகரில் விமானப்படை வீரர்கள் வானில் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கின.

இத்தாலி நாட்டின் ரோம் நகருக்கு அருகில் இன்று தேசிய விமானப் படை வீரர்கள் சிலர் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது, இரண்டு விமானங்கள் வானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது,   நேருக்கு நேர் மோதி தரையில் விழுந்து தீப்பிடித்தன.

இதில், இரண்டு விமானத்தைச் சேர்ந்த 2 விமானிகளும் உயிரிழந்தனர். இந்த விபத்து எப்படி நடந்து என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்திற்கு இத்தாலி பிரதமர் மெலோனி வருத்தம் தெரிவித்துள்ளார்.