வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 மார்ச் 2023 (08:42 IST)

மூன்றாம் உலகப்போரை தடுக்க என்னால்தான் முடியும்! – முன்னாள் அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை!

உலகம் முழுவதும் ஆங்காங்கே சில நாடுகள் இடையே போர் மூண்டு வரும் நிலையில் மூன்றாம் உலகப்போரை தன்னால் மட்டுமே தடுக்க முடியும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபராக இருந்தவர் டொனால்டு ட்ரம்ப். கடந்த 2021ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிப்பெற்ற நிலையில் ட்ரம்ப் படுதோல்வியடைந்தார். மேலும் அவரது வெறுப்பு பிரச்சாரங்கள் உள்ளிட்டவற்றால் யூட்யூப், ட்விட்டர் உள்ளிட்டவற்றிலும் அவர் தடை செய்யப்பட்டிருந்தார். தற்போது எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பின் முடக்கப்பட்ட ட்ரம்ப் கணக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு மாகாணங்களுக்கு சென்று டொனால்டு ட்ரம்ப் தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் “நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வந்திருப்பேன். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நான் சொன்னால் கேட்பார். மூன்றாம் உலகப்போரை தடுக்கும் வலிமை எனக்கு மட்டும்தான் உள்ளது” என்று கூறியுள்ளார்.

Edit by Prasanth.K