திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (22:47 IST)

இரு மாணவிகள் தற்கொலை முயற்சி

சென்னை வேப்பேரியில் மன உளைச்சலில் இருந்த மாணவிகள் இருவரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேப்பேரில் பகுதியிலுள்ள தமிழ் நாடு அரசு கால் நடை மருத்துவமனைக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு விடுதியில் தங்கி மதுரை மற்றும் வேலூரைச் சேர்ந்த 2 மாணவிகள் 2 ஆம் ஆண்டு படித்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிலாக இருந்து வந்த நிலையில், அங்குள்ள சக மாணவிகள் இவர்களின் நட்பை  பற்றி தவறாகப் பேசியுள்ளதாகத் தெரிகிறது. இதேபோல் பேசாசிரியர்களும் இவர்களிடம் பேசாமல் இருந்துள்ளதாககக் கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவிகள் இருவரும் நேற்று கல்லூரி ஆய்வுக்கூடத்தில் இருந்து, மெர்குரி சல்பேட் என்ற வேதி பொருளௌ கொண்டு வந்து விடுதி அறையில் வைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.