செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 10 மே 2019 (08:25 IST)

ஒரு மணி நேரத்தில் இரண்டு நிலநடுக்கங்கள்: ஜப்பானில் பரபரப்பு

நிலநடுக்கம், எரிமலை வெடிப்பது, சுனாமி போன்ற அபாயங்கள் அதிகம் இருக்கும் ஜப்பானில் இன்று காலை ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்நாட்டு மக்கள் பீதியில் உள்ளனர்.

ஜப்பானில் இன்று காலை 6.30 மணிக்கு ஒரு நிலநடுக்கமும், சரியாக ஒரு மணி நேரம் கழித்து அதாவது காலை 7.30 மணிக்கு இன்னொரு நிலநடுக்கமும் ஏற்பட்டதால் அந்நாட்டில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் கியூஸு என்ற தீவில் உள்ள மியாசாகி நகரத்தில் இருந்து 24 கிலோ மீட்டர் கடலுக்குள் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்தும் இதுவரை தகவல்கள் வெளிவரவில்லை. இந்த இரண்டு நிலநடுக்கங்களும் 5.6 ரிக்டர் , 6.3 ரிக்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளது.