ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 2 ஜூன் 2020 (15:44 IST)

கருப்பாய் மாறிய டிவிட்டர் பறவை: கிளம்பும் எதிர்ப்பு!

அமெரிக்காவில் கருப்பின இளைஞர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது ட்விட்டர் நிறுவனம்.
 
அமெரிக்காவில் உள்ள மின்னபொலிஸ் என்ற நகரில் கருப்பின நபரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவரை அந்நாட்டு போலீசார் கழுத்தை காலால் நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவியதை அடுத்து நாட்டில் வன்முறை வெடித்தது.
 
முதலில் மின்னபொலிஸ் நகரில் மட்டும் வெடித்த வன்முறை தற்போது நாடு முழுவதும் பரவி விட்டதாகவும் இந்த வன்முறையை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் அமெரிக்க அரசு திணறி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. 
 
மேலும் அமெரிக்காவில் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள கருப்பின மக்கள் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் ட்விட்டர் நிறுவனமும் அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், கருப்பு வண்ண புகைப்படத்தை வைத்துள்ளது.  மேலும் தங்களது பயோவில் #BlackLivesMatter என குறிப்பிட்டுள்ளனர். இது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.