63 லட்சத்தை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு: அடங்காத கொரோனாவால் அதிர்ச்சி
உலகளவில் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63 லட்சத்தை தாண்டிவிட்டதாகவும், பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கிவிட்டதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,365,173 என்றும் லகளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 3,77,152 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக அளவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 29 லட்சம் என்றும் மேலும் 53,407 பேர் அபாய கட்டத்தில் உள்ளதால் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.
உலக அளவில் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் 18,59,323 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டில் மட்டும் 106,925 பேர் பலியாகியிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 529,405 எனவும், ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 414,878 எனவும், ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 286,718 எனவும், இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 276,332 எனவும், இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 233,197 எனவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 198,370 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5,608 பேர்கள் பலியாகியிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.