திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 30 ஏப்ரல் 2018 (22:11 IST)

ஃபேஸ்புக் போல் டுவிட்டரும் கசியவிட்டதா? அதிர்ச்சி தகவல்

பயனாளர்களின் தகவல்களை இங்கிலாந்து நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்திற்கு ஃபேஸ்புக் நிறுவனம் வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பரபரப்பே இன்னும் அடங்கவில்லை. இதற்காக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க், அமெரிக்க பாராளூமன்றத்தில் வருத்தம் தெரிவித்தார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் போல் டுவிட்டரும் தங்களுடை பயனாளிகளின் தகவல்களை அதே கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. 
 
கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் வரை, டுவிட்டர் நிறுவனம் தமது பயனாளர்களின் பதிவுகள், பெயர், புகைப்படங்கள், இருப்பிட விவரங்கள் உள்பட பல தகவல்களை கேம்பிரிட்ஜ் நிறுவனத்திற்கு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
ஆனால் இதுகுறித்து டுவிட்டர் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் விளக்கமளித்தபோது, 'விளம்பரம் குறித்த பணிகளில் மட்டும், நிறுவன விதிமுறைகளுக்கு உட்பட்டு கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டதாகவும், பயனாளர்களின் விவரங்களை அந்த நிறுவனத்திற்கு வழங்கவில்லை என்றும் கூறியுள்ளார்.