1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 21 ஏப்ரல் 2018 (16:00 IST)

எஸ்.வி.சேகரை கைது செய்ய முடிவா? முன்ஜாமீன் எடுக்க முயற்சிப்பதாக தகவல்

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது முகநூலில் பதிவு செய்திருந்த எஸ்.வி.சேகருக்கு ஆளும் கட்சி அமைச்சர்கள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். நேற்று எஸ்.வி.சேகர் வீடு முன்பும், பாஜக அலுவலகமான கமலாலயம்
முன்பும் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர்
 
இந்த நிலையில் எஸ்.வி.சேகர் மீது புகார் கொடுத்தால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்ததை அடுத்து அவர் மீது புகாரும் பதிவு  செய்யப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து எஸ்.வி.சேகரை எந்த நேரமும் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளிவந்தவுடன் எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் பெற முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
 
இந்த நிலையில் எஸ்.வி.சேகர் மீது கட்சிரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.