கொரோனா பற்றிய தவறான தகவல்கள்… அதிகமாக பரப்பியது ட்ரம்ப்தானாம்!
கொரோனா பற்றிய முரணான தகவல்களை அதிகமாக பரப்பிய நபர் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான் என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.
உலகிலேயே அதிக சர்ச்சைக்குரிய நபராக இப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான் இருந்து வருகிறார். விரைவில் அமெரிக்க தேர்தலில் அவர் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். உலகிலேயே கொரோனாவால் அதிக பாதிப்படைந்த நாடாக அமெரிக்கா இருப்பதற்கு ட்ரம்பின் ஆட்சிதான் காரணம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கொரோனாவைப் பற்றி அதிகமான பொய்யான மற்றும் முரணான தகவல்களை பரப்பியதும் ட்ரம்ப்தானாம். இது சம்மந்தமாக 38 மில்லியன் ஆங்கிலக் கட்டுரைகளை அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகம் ஆய்வு செய்து முடிவு வெளியிட்டுள்ளது. அதில் ட்ரம்ப் 38 சதவீதம் பொய்யான தகவல்களை சொல்லியுள்ளதாக தெரிவித்துள்ளது.