1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 1 அக்டோபர் 2020 (13:13 IST)

டபுள் ஆன பாதிப்பு: கேரளாவை சின்னாபின்னம் ஆக்கிய செப். !!

கேரளாவில் செப். மாதத்தில் மட்டும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்தியாவிலேயே முதன்முதலாக கேரளாவில் தான் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது என்றாலும் கேரள முதல்வர் மற்றும் கேரளா சுகாதாரத்துறையினர் அதிரடி நடவடிக்கையின் காரணமாக கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது.  
 
ஆனால் கடந்த சில வாரங்களாக அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. ஆம். கேரளாவில் கடந்த 28 நாட்களில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.  
 
இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் கேரள மாநில கிளை பிரநிதிகள் அம்மாநில முதல்வருக்கு எச்சரிக்கை கடிதம் ஒன்றை எழுதியது.  அதில், மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு அச்சுறுத்தும் நிலையை எட்டியிருக்கிறது.  
 
இப்படியே போனால் வருகிற நாட்களில் தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்து விடும். எனவே இந்த சமூக பரவலை கட்டுப்படுத்த மருத்துவ அவசர நிலையை பிறப்பிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
இந்நிலையில், கேரளாவில் செப். மாதத்தில் மட்டும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செப். மாத துவக்கத்தில் 75,385 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 1,20,721 ஆக அதிகரித்துள்ளது. 
 
அதாவது தேசிய அளவில் கொரோனா பாதிப்பு உறுதியாவது 8% ஆக உள்ள நிலையில் கேரளத்தில் 12.9% ஆக உள்ளது.