திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 1 அக்டோபர் 2020 (10:54 IST)

கோவாவுக்கு ட்ரிப் சென்ற கவர்ச்சி நடிகை… வாடகை தராததால் கார் டிரைவர் புகார்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் முமைத் கான்.

தமிழில் போக்கிரி, வில்லு மற்றும் கந்தசாமி ஆகிய படங்களில் கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடியவர் முமைத் கான். அதுபோல தெலுங்கு சினிமாக்களிலும் அவர் பல பாடல்களுக்கு நடனமாடியுள்ளார். இந்நிலையில் இப்போது அவர் மீது கார் டிரைவர் ஒருவர் தனக்கு தர வேண்டிய வாடகைப் பணத்தைக் கொடுக்கவில்லை எனக் கூறி புகார் கூறியுள்ளார்.

 ஐதராபாத்தை சேர்ந்த கார் டிரைவர் ஒருவர் மூன்று நாள் ட்ரிப் என சொல்லி என் காரை கோவாவுக்கு வாடகைக்கு எடுத்து சென்றார். ஆனால் அங்கு அவர் 8 நாட்கள் தங்கிவிட்டு எனக்கு தரவேண்டிய 15,000 ரூபாய் வாடகையை தரவில்லை எனக் கூறியுள்ளார்.