செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 23 அக்டோபர் 2020 (07:32 IST)

டிரம்ப்-ஜோபிடன் நேருக்கு நேர் விவாதம்!

டிரம்ப்-ஜோபிடன் நேருக்கு நேர் விவாதம்!
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் 3ஆம் தேதி நடைபெறவிருப்பதை அடுத்து அதிபர் வேட்பாளர்களான டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் நேருக்கு நேர் விவாதம் வருகின்றனர். இந்திய நேரப்படி இன்று காலை 6.30 தொடங்கிய இந்த விவாதத்தில் டிரம்ப் பேசியபோது அமெரிக்காவில் கொரோனா வைரஸால் இறப்பு விகிதம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது என்றும், பல மாகாணங்களில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது என்றும் கூறினார்.
 
மேலும் பொதுமுடக்கத்தை விட்டால் வேறு எதைப் பற்றியும் ஜோ பிடனுக்கு பேசத்தெரியாது என்றும், ஜோ பிடனை போல் என்னால் ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்க முடியாது என்றும், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ சீனா தான் காரணம் என்றும் கூறினார். மேலும் தாம் சொன்ன காலத்திற்குள் கொரோனா தடுப்பூசி கண்டறியப்படும் என தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும், அரசின் தடுப்பு நடவடிக்கை மூலம் கொரோனா உயிரிழப்புகள் தடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
 
டிரம்பின் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது என மறுத்த ஜோ பிடன், தளர்வுகளை வழங்கும் அரசு வைரஸ் பரவலை தடுக்க வழிமுறைகளை வகுக்கவில்லை என்றும் டிரம்ப் ஏன் முகக் கவசம் அணிவதில்லை? என்றும் ஜனவரி மாதமே கொரோனா பற்றி தெரிந்திருந்தும் ஏன் சொல்லவில்லை? என்றும் பேசினார்.
 
மேலும் அமெரிக்க தேர்தலில் பிறநாடுகள் மூக்கை நுழைத்தால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்த ஜோ பிடன் ரஷியாவை பற்றி டிரம்ப் ஏன் வாய் திறக்க மறுத்து வருகிறார் என கேள்வி எழுப்பினார். மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருக்கிறது என ஜோ பிடன் பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்றையும் முன்வைத்தார்.