தொடர்புடைய செய்திகள்
- திருப்புளியால் தாக்கப்பட்ட என்ஜினீயர் - கணவன் இறந்தது தெரியாமல் குழந்தை பெற்றெடுத்த அவரது மனைவி
- மஹி தத்தெடுத்த மகள் இல்லை...நான் பெற்ற மகள் : ரேவதி கொடுத்த அதிர்ச்சி
- மலை உச்சிக்கு பயந்து ஷூட்டிங்கை விட்டு தலைதெறிக்க ஓடிய நடிகை
- இனி தமிழில் மட்டுமே: ஜி.வி. சூப்பர் முடிவு
- பெயரை கோ.வெ.பிரகாஷ் என மாற்றிய ஜி.வி.பிரகாஷ் - காரணம் என்ன?
அமெரிக்காவில் தமிழக சாப்ட்வேர் எஞ்சினியர் மனைவியுடன் கைது
குழந்தைக்கு உயர்தர சிகிச்சை அளிக்காத தமிழகத்தை சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர் அமெரிக்காவில் மனைவியுடன் கைது செய்யப்பட்டார். இந்த தம்பதியின் இரண்டு குழந்தைகள் தற்போது காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த பிரகாஷ் என்ற சாப்ட்வேர் எஞ்சினியர் அமெரிக்காவில் மனைவி மற்றும் இரட்டை குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இந்த தம்பதியின் இரட்டை குழந்தைகளில் ஒன்றுக்கு இடது கையில் வீக்கம் இருந்ததால் அந்த குழந்தையை ப்ரோவர்டு கௌண்டியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர்.
மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்து உயர்தர சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர். ஆனால் உயர்தர சிகிச்சைக்கு பிரகாஷ் தம்பதியிடம் பணம் இல்லாததால், வேறு மருத்துவமனைக்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் குழந்தைக்கு உயர்தர சிகிச்சை தர மறுத்ததாக மருத்துவமனை நிர்வாகம் செய்த புகாரை அடுத்து பிரகாஷ் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டனர். அவர்களது இரண்டு குழந்தைகளும் தற்போது காப்பகத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
