திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (08:52 IST)

”பாஸ்போர்ட்டாலதான் படம் ஃப்ளாப் ஆகுது?” – அக்‌ஷய் குமார் எடுத்த அதிர்ச்சி முடிவு!

பிரபல இந்தி நடிகரான அக்‌ஷய் குமார் தனது கனடா பாஸ்போர்ட்டை துறக்க போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் அக்‌ஷய் குமார். இவர் நடித்த பூல் புலய்யா, வெல்கம், சிங் இஸ் கிங் உள்ளிட்ட பல படங்கள் இந்தியில் நன்றாக ஓடி பெரும் வெற்றி பெற்றவை. பல ஆண்டுகளாக இந்தி சினிமாவில் ஹீரோவாக நடித்து வரும் அக்‌ஷய் குமாரின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றன. தொடர்ந்து பல பயோகிராபி படங்களில் நடித்தது ஒரு பக்கம் காரணமாக சொல்லப்பட்டாலும், அவரிடம் உள்ள கனடா பாஸ்போர்ட்டும் அடிக்கடி விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அக்‌ஷய் குமார் கனடா நாட்டு பிரஜை என பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.

இதனால் தனது கனடா நாட்டு பாஸ்போர்ட்டை துறக்க அக்‌ஷய்குமார் முடிவு செய்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் “என் படங்கள் முன்னர் சரியாக ஓடவில்லை. அப்போது நான் வேலை நிமித்தமாக கனடா சென்றேன். என் நண்பர் சொன்னதன் பேரில் கனடா பாஸ்போர்ட் எடுத்தேன். அதற்கு பின் நான் நடித்த இரண்டு படங்கள் நன்றாக ஓடின. அதனால் இந்தியா வந்து மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினேன். ஆனால் இந்த கனடா பாஸ்போர்ட்டை நான் மறந்துவிட்டேன். ஆனால் இப்போது என் பாஸ்போர்ட்டை மாற்ற விண்ணப்பித்துள்ளேன்.

இந்தியாதான் எனக்கு எல்லாமே. நான் இங்கிருந்துதான் சம்பாதித்தேன். திரும்ப கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியம்”என்று கூறியுள்ளார்.

கனடா பாஸ்போர்ட்டை மாற்றுவதால் இனி தனது இந்திய குடியுரிமை விமர்சனத்திற்கு உள்ளாகாது என நம்பிக்கை தெரிவித்துள்ளார் அக்‌ஷய்குமார்.

Edit by Prasanth.K