1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By திருமலை சோமு
Last Modified: புதன், 30 ஜூன் 2021 (00:18 IST)

அனைத்து உயிர்களுக்குமான சொர்க்கபூமி திபெத்!

சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிக அருமையாக பேணப்பட்டு வருகிறது. மலைகளாளும் நீரூற்றுகளாலும் சூழப்பட்டு இயற்கை பேரழகுடன் கூடிய சொர்க்க பூமியாக திகழும் திபெத்தின் சுற்றுச் சூழல், மக்கள் மற்றும் பிற உயிரனங்களுக்கு ஏற்றதாக உள்ளது. 
 
திபெத் பீடபூமியில் 5,000 க்கும் மேற்பட்ட தாவர வகைகள் உள்ளன. இதில் சுமார் 2,000 வகை மருத்துவ குணம் கொண்ட மூலிகைதாவரங்கள் உள்ளன. திபெத்தில் 572 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன. மலைகள் மற்றும் காடுகளால் சூழப்பட்டுள்ள இங்கு ஏராளமான  விலங்குகளும் வசிக்கின்றன. பனி சிறுத்தை, கருப்பு கரடி, காட்டு யாக் நீல செம்மறி, கஸ்தூரி மான், தங்க குரங்கு, காட்டு கழுதை, திபெத்திய மான், சிவப்பு பாண்டா போன்ற பல அரிய விலங்குகளும் இங்கு வசிக்கின்றன. 
 
திபெத் காடுகளில் 200 ஆண்டுகளுக்கு மேலான மரங்கள் உள்ளன. மேலும் அங்கு சுமார் 132 வெவ்வேறு தாதுக்கள் உள்ளன,  ஆசியாவின் பல முக்கிய நதிகளுக்கு திபெத் ஊற்று மூலமாக உள்ளது.  இந்த நதிகள் சீனா, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, வியட்நாம், லாவோஸ் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளில் பாய்கின்றன. திபெத்தில் 15,000 க்கும் மேற்பட்ட இயற்கை ஏரிகள் காணப்படுகின்றன. அதில் மிக முக்கியமான ஒன்று யாம்ட்ரோக் ஏரி யம்ட்ரோக் ஏரி, யம்ட்ரோக் யும்த்சோ அல்லது யம்ஜோ யூம்கோ என்றும் அழைக்கப்படுகிறது, இது திபெத்தின் மூன்று புனித ஏரிகளில் ஒன்றாகும், இதில் நம்த்சோ ஏரி மற்றும் மனசோரோவர் ஏரி ஆகியவை அடங்கும். இந்த ஏரியில் பல சிறிய தீவுகள் உள்ளன, அங்கு பல்வேறு  பறவை இனங்கள் வசிக்கின்றன. தெற்கு திபெத்தில் வலசை வரும் பறவைகளின் மிகப்பெரிய வாழ்விடமாக யம்ட்ரோக் ஏரி உள்ளது. அதே போல் திபெத்தின் லாசா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள லாலு ஈரநிலம் திபெத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஒரு மிக சிறந்த எடுத்துக்காட்டாகும். இது உலகின் மிகப்பெரிய நகர்ப்புற ஈரநிலமாக இருப்பதால், இயற்கை பாதுகாப்பு மண்டலமாக அமைக்கப்பட்டுள்ளது. 12.2 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள இம்மண்டலம் திபெத் தன்னாட்சி பிராந்தியத்தின் தலைநகரான லாசாவில் அமைந்துள்ளது. 
 
சீனாவில் 38.43 மில்லியன் ஹெக்டேர் ஈரநிலங்கள் உள்ளன, இது ஆசியாவில் முதல் இடத்திலும், உலகில் நான்காவது இடத்தையும் வகிக்கிறது. லாலு ஈரநில இயற்கை பாதுகாப்பு மண்டலம் “லாசாவின் நுரையீரல் என்றால் அது மிகையில்லை. திபெத் ஒரு அருமையான சுற்றுலாத் தலம் என்பதையும் தாண்டி  அனைத்து  உயிர்களும் இயற்கை அன்னையின் மடியில் கொஞ்சித் தவழும்படியான சுற்றுச்சூழலை கொண்ட சொர்க்க பூமியாகவும் விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
- திருமலை சோமு