வியாழன், 8 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 6 மார்ச் 2025 (18:36 IST)

இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜய்.. ஒருநாள் நோன்பு இருப்பதாக தகவல்..!

இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜய்.. ஒருநாள் நோன்பு இருப்பதாக தகவல்..!
இப்தார் விருந்தில் கலந்து கொள்ளும் தவெக தலைவர் விஜய், நோன்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும், அதில் விஜய் இதில் கலந்து கொள்வார் என்றும், இதற்காக அவர் நோன்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நோன்பு நிகழ்ச்சிக்காக, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி மசூதி நிர்வாகிகளுக்கும், வேறு சில நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஐந்து இஸ்லாமியர்களை அழைத்து வருமாறு, மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை மாலை நடைபெறும் இப்தார் விருந்து, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடிக்கும் என்றும், விஜய் இதில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் ஒருநாள் முழுவதும் நோன்பு இருந்து, இஸ்லாமிய வழிமுறைப்படி தொழுகை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் கவனித்து வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva