1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 21 ஜூன் 2021 (15:06 IST)

தீவிரமடைந்த கொரோனா; 100 கோடி தடுப்பூசி செலுத்தி சீனா சாதனை!

உலகம் முழுவதும் கொரோனா பரவல் உள்ள நிலையில் சீனா இதுவரை 100 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைத்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் உலக நாடுகள் பல பல்வேறு தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு செலுத்தி வருகின்றன. பல நாடுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கள் நாட்டு மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியையாவது செலுத்திவிட தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் 140 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவில் 100 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என சீனா அறிவித்துள்ளது. அதேசமயம் 100 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக சீனா தெரிவித்தாலும் மக்கள் தொகையில் அதிகமானோருக்கு முதல் டோஸ் தடுப்பூசியே இன்னும் செலுத்தப்படவில்லை என்ற புகார்களும் உள்ளது.