திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 29 ஜூன் 2021 (10:39 IST)

இந்திய – சீன எல்லையில் 50 ஆயிரம் வீரர்கள் குவிப்பு! – பீரங்கியை நிறுத்திய சீனா?

கடந்த ஆண்டு முதலாக பதற்றம் நிறைந்த பகுதியாக அறியப்படும் லடாக் எல்லையில் மீண்டும் இந்திய ராணுவத்திலிருந்து 50 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு சீன – இந்திய எல்லையான லடாக்கில் சீன – இந்திய ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து சீன பொருட்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டதுடன், இரு நாடுகளுக்கு இடையே சமாதான பேச்சுவார்த்தைகளும் நடந்து வந்தது. இறுதியாக இரு நாட்டு படைகளும் கணிசமான ராணுவ துருப்புகளையும், தளவாடங்களையும் திரும்ப பெற்றன.

தற்போது லடாக் எல்லையில் 2 லட்சம் இந்திய வீரர்கள் பாதுகாப்பு பணியில் உள்ள நிலையில், அத்துமீறல் சம்பவங்கள் தொடர்வதால் மேலும் 50 ஆயிரம் வீரர்களை எல்லையில் நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. அதேசமயம் சீனாவும் எல்லையில் போர் விமானங்கள், நீண்ட தூரம் தாக்கும் பீரங்கிகள் உள்ளிட்டவற்றை நிறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.