செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 15 மே 2019 (10:21 IST)

சுருங்கி உடையும் சந்திரன்: நாசா வெளியிட்ட விசித்திர தகவல்!

சந்திரனின் உட்பகுதி குளிரடைந்து வருவதால் சந்திரனின் மேற்புறத்தில் சுருக்கங்கள் விழுந்து வருவதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது. 
 
சந்திரனின் சுருக்கம் குறித்து நாசா வெளியிட்டுள்ள தகவலின் முழு விவரம் பின்வருமாறு, கடந்த பல மில்லியன் ஆண்டுகளாக சந்திர மண்டலம் குளிரடையும் நடைமுறையால் இப்போது 50 மீ வரை சுருங்கியுள்ளது. இவ்வாறு சந்திரனின் மேற்பகுதி சுருங்கும் போது உடையவும் செய்கிறது. 
 
இதை தவிர்த்து சந்திரனில் பூகம்பங்களும் ஏற்படுகிறது. பூகம்பங்கள் ஓரளவுக்கு வலுவாகவே உள்ளன. ரிக்டர் அளவுகோலில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் பூகம்பத்தின் தாக்கம் இருக்கின்றன.
 
இது வரை சந்திர மண்டலத்தின் உட்பகுதி உஷ்ணமடைவதால் பூகம்பங்கள் ஏற்படுகிறது என கருதப்பட்டது. ஆனால், சந்திர மண்டலம் குளிரடைவதால்தான் சுருக்கங்களும், பூகம்பங்களும் ஏற்படுகிறது என்பது வியப்பை தருகிறது என கூறப்பட்டுள்ளது.