1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 2 மே 2019 (16:42 IST)

சாதி வெறி பிடிச்சவங்களா நீங்க! கடுப்பான அஞ்சனா!

பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா  தனியார்  தொலைக்காட்சியில் கடந்த  10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர்.  தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் “கயல்” படத்தின் ஹீரோவான  சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயகியிருந்தார்.  


 
சந்திரன் – அஞ்சனா தம்பதியருக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு ருத்ராக்ஸ் என்று பெயர் வைத்துள்ளனர். குழந்தை பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். இது அஞ்சனா ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.


 
சமூக வளைத்தளத்தில் ஆக்டீவாக இருக்கும் அஞ்சனா அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.  அந்த வகையில் சமீபத்தில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்ட அவர் அதில் புடவை அணிந்தும் அவரது கணவர் வேஷ்டியும்  அணிந்திருந்தனர்.  


 
இதனை கண்ட சிவகார்த்திகேயன் என்ற ட்விட்டர்வாசி  ‘நீங்கள் சாதி வெறி பிடிச்சவரா’ என்று கேள்வி கேட்டார். இதற்கு கடுப்பாகி பதிலளித்த அஞ்சனா, இது நம் பாரம்பரியம்! அதை பின்பற்றுவதில் என்ன தவறு? இது வெறி ஆகிவிடாது. இந்துவாக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும் அனைவருக்கும் வேண்டியது அன்பு மட்டும் தான் என்று பதிலளித்துள்ளார்.