அரேபிய குதிரை இல்லை இவள் அசலான குதிரை

Horse Girl
Last Updated: செவ்வாய், 21 மே 2019 (18:28 IST)
அழகான பெண்களை பலர் குதிரையோடு ஒப்பிட்டு பேசுவார்கள். ஆனால் ஒரு பெண் குதிரையை போலவே நான்கு கால்களில் ஓடுவதையும், குதிப்பதையும் பார்த்திருக்கிறீர்களா?
நார்வே நாட்டை சேர்ந்த இளம்பெண் அலாய் கிறிஸ்டின். இவர் குதிரை போலவே நடப்பது, ஓடுவது, தாவுவது என அனைத்து குணங்களையும் பெற்றுள்ளார். அவற்றை வீடியோவாக பதிவு செய்து ட்விட்டர், இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டதும் குவிந்தன ரசிகர்களும், பாராட்டு மழைகளும்.

சிறு வயதிலிருந்தே விலங்குகளை போல ஒப்பனை செய்து நடித்த கிரிஷ்டியனுக்கு இந்த பழக்கங்கள் அப்போதிருந்தே தொற்றி கொண்டு விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஒரு சில வீடியோக்களே அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தாலும் அதற்குள் 25000 க்கும் மேற்பட்ட ரசிகர்களை குவித்திருக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :