உலகக்கோப்பையில் இருந்து நீக்கப்பட்ட வீரர் – நூதன எதிர்ப்பு !

Last Modified செவ்வாய், 21 மே 2019 (14:26 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் உலகக்கோப்பையில் இருந்து நீக்கப்பட்டதற்கு வித்யாசமான முறையில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி அங்கு அனைத்துப் போட்டிகளிலும் தோற்றுள்ளது. இந்த தோல்விக்கு அந்த அணியின் பந்துவீச்சு பலவீனமாக இருப்பதேக் காரணம் என சொல்லப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் அணியின் உலகக்கோப்பை தேர்வில் மாற்றங்களை செய்துள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்.

இதனால் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள ஜூனைத் கானும் உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கு அவர் நூதனமான முறையில் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். தனது டிவிட்டரில் வாயில் கருப்புத்துணி கட்டிக்கொண்டுள்ள புகைப்படத்தை பகிர்ந்து அதன் கீழ் ‘நான் எதுவும் சொல்லவில்லை. உண்மை சில நேரங்களில் கசக்கத்தான் செய்யும்’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :