வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 5 மே 2024 (12:57 IST)

இன்ஸ்டாவில் போட்டோ போட்ட அழகி.. இருக்குமிடம் தேடி சென்று கொலை செய்த இளைஞர்! – ஈக்வடாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம்!

Equator model woman
ஈக்வடார் நாட்டில் உணவகம் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பிரபல அழகியை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ஈகுவடார் நாட்டை சேர்ந்த மாடல் அழகி லாண்டி பராக கெய்புரோ. ஈகுவடார் அழகி போட்டியில் பங்கேற்ற லாண்டிக்கு அப்பகுதியில் பிரபல போதைப்பொருள் கும்பலின் தலைவனாக இருந்த லியாண்டிரோவுடன் ரகசிய காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் சிறையில் இருந்த லியாண்டிரோ அங்கு நடந்த கலவரம் ஒன்றில் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல உணவகம் ஒன்றில் உணவருந்திய லாண்டி அதை படம் பிடித்து தனது இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்துள்ளார். அதன் பிறகு சில நிமிடங்களில் அந்த உணவகத்திற்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் லாண்டியையும், அவரது நண்பரையும் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் லாண்டி அங்கேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். அப்பகுதியின் அரசியல் பிரமுகர்கள், மாஃபியாக்களுடன் தொடர்பில் இருந்த பிரபல மாடல் அழகி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஈகுவடாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K