1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 4 மே 2024 (08:20 IST)

நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கு இன்சுலின் செலுத்தி கொலை.. நர்சுக்கு 760 ஆண்டுகள் சிறை தண்டனை..!

நீரிழிவு நோயில்லாதவர்களுக்கு இன்சுலின் செலுத்தி கொலை செய்த நர்ஸ் ஒருவருக்கு 760 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
அமெரிக்காவைச் சேர்ந்த பிரஸ்தி என்ற நர்ஸ் உயிரிழக்கும் அளவுக்கு இன்சுலின் செலுத்தி 17க்கும் மேற்பட்ட நீரிழிவு நோய் இல்லாத நோயாளிகளை கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 
 
இந்த குற்றச்சாட்டு குறித்து வழக்கு பதிவு செய்து அமெரிக்க போலீசார் விசாரணை செய்த நிலையில் நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கு இன்சுலின் செலுத்தி கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. 
 
இதனையடுத்து அவருக்கு மூன்று ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது மட்டுமின்றி 380 முதல் 760 வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
மன அழுத்தம் காரணமாக நோயாளிகளிடமும் மற்றவர்களிடம் எப்போதும் கோபமாக நடந்து கொண்டு அதிக டோஸ் இன்சுலினை செலுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார் என்றும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran