முகத்துக்கு பூசும் பவுடரை சாப்பிடும் இளம்பெண்... மருத்துவர் அதிர்ச்சி

england
sinoj kiyan| Last Modified செவ்வாய், 7 ஜனவரி 2020 (20:19 IST)
இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் பெண் ஒருவர் 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து  முகத்தில் பூசும் டால்கம் பவுடரை சாப்பிட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் நாட்டில் வசிக்கும் லிசா ஆண்டர்சன் என்ற பெண், சுமார் 15 ஆண்டுகளாக டால்கம் பவுடரை சாப்பிட்டு வந்துள்ளார்.  இதை அறிந்த அவரது பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர், இவருக்கு , இரும்புச் சத்து உள்ளிட்ட நோய்க்கான அறிகுறிகள் இருப்பதை தெரிவித்துள்ளார்.
 
மேலும்,இப்பெண் இந்தப் பவுடரை சாப்பிடுவதற்காகவே இரவில் தூக்கத்தில் இருந்து விழித்திருப்பார் என தெரிவித்துள்ளனர்.
 
இதுநாள் வரை அவர் பவுடருக்கு மட்டும் சுமார் 800 பவுண்டுகள் 7.50 லட்சம் ரூபாய்கள் செலவிட்டுள்ளார். பவுடரை தின்றால் புற்று நோய் வரும் என கூறுவார்கள். ஆனால் இப்பெண்ணுக்கு எதுவும் ஆகவில்லை என தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :