வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : வெள்ளி, 8 நவம்பர் 2019 (21:57 IST)

இளைஞரின் காதுக்குள் ’கரப்பான் பூச்சி’ குடும்பம் ! மருத்துவர் அதிர்ச்சி ...என்ன நடந்தது தெரியுமா ?

சீன நாட்டில் வசித்து வந்த இளைஞர் (24) ஒருவருக்கு காதில் எதோ ஊர்வது போன்று இருந்துள்ளது. அதனால் அவருக்கு கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.
உடனே தனது குடும்பத்தாரிடம் இதுகுறித்து அவர் கூறியுள்ளார்,. அவர்கள் காதுக்குள் பார்த்தபோது காதில் கரப்பான் பூச்சியின் மீசை இருந்துள்ளது (நீட்சி உறுப்பு). அதனால் அவர்கள் உடனே இளைஞரை காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணரிடம் அழைத்து  சென்றனர்.
 
அங்கு இளைஞரின் காதுக்குள் டார்ச் லைட் அடித்துப் பார்த்த மருத்துவர்  ஜாங் ஒய்ஜிங் , உள்ளே கரப்பான் பூச்சி குடும்பமே வசிப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஒரு சிறிய ரக இடுக்கியின் மூலம் அதை வெளியே எடுத்தார். அதன்பின்புதான் இளைஞருக்கு காதில் வலி குறைந்தது.
 இந்த சம்பவம் அங்கு பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.