1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : செவ்வாய், 7 ஜனவரி 2020 (17:45 IST)

பாகிஸ்தானில் இந்து தாய், மகளை அடிக்கும் இளைஞர்கள்... பதறவைக்கும் வீடியோ

அண்டை நாடானா பாகிஸ்தானில் வசிக்கும்  இந்து மதத்தைச் சேர்ந்த தாய், மகளை இளைஞர்கள் அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாக்கிஸ்த்தான் தெஹரீக் - எ-இன்சாஃப்  ஆட்சி நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், இன்று அந்நாட்டில் வசித்து வந்த இந்து மதத்தைச் சேர்ந்த தாய், மகள் ஆகிய இருவரையும் சில இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் சரமாரியாகத் தாக்கும் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. 

இந்த வீடியோவில்,  ஒரு தாய் தனது மகளுடன் நடந்து வரும் போது, சில இளைஞர்கள் அவரை வழி மறித்துவிட்டு,அவர்களை கீழே தள்ளி தாக்குதல் நடத்துகின்றனர்.

அப்போது, மகள் அங்கிருந்து ஓடும்போது, ஒரு இளைஞர் அந்தப் பெண்ணைத் துரத்தி கீழே தள்ளி தனது கையில் வைத்திருந்த கோலால் அவரைக் கொடூரமாகத் தாக்குகின்ற வீடியோ பார்ப்போரின் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது.