1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 6 செப்டம்பர் 2017 (06:23 IST)

அனிதாவுக்காக ஆர்ப்பாட்டம் செய்யும் அமெரிக்க தமிழர்கள்

தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தங்களது ஆதரவை வெளிக்காட்ட தயங்குவதில்லை. இதற்கு முன்னர் ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போன்ற பிரச்சனையின்போது உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் ஆதரவு கொடுத்தனர். அதேபோல் நீட் தேர்வு காரணமாக மருத்துவம் படிக்க முடியாத மனவிரக்தியில் தற்கொலை செய்து கொண்ட அனிதாவுக்கு ஆதரவாக அமெரிக்க தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.



 
 
அமெரிக்காவில் உள்ள முக்கிய நகரங்களான நியூஜெர்சி, மிக்சிகன், அட்லாண்டா, கலிபோர்னியா, சிகாகோ, புளோரிடா போன்ற பல நகரங்களில் வாழும் தமிழர்கள், அனிதா மரணத்துக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தினர். அதுமட்டுமின்றி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு முழக்கங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் மத்திய பா.ஜ.க அரசுக்கும், தமிழக அரசுக்கும் எதிராக அவர்கள் போட்ட கோஷம் அமெரிக்காவையே உலுக்கியது.
 
அதுமட்டுமின்றி நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க தமிழர்களிடம் கையெழுத்து அதை இந்திய தூதரிடம் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமெரிக்க தமிழர் ஒருவர் தெரிவித்தார்.