வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (07:27 IST)

ஒரு ரூபாய் கூட எடுத்து கொண்டு வரவில்லை: ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி பெட்டி பெட்டியாக கோடிக்கணக்கில் பணத்தை எடுத்துக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறி விட்டார் என்று கூறப்பட்ட நிலையில் ஒரு ரூபாய் கூட தான் எடுத்துக் கொண்டு வரவில்லை என அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் தனது முகநூலில் அவர் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் அமைதியான முறையில் ஆட்சியை ஒப்படைக்க தயாராக இருந்ததாகவும் ஆனால் தாலிபான்கள் என்னை தேடுவதை அறிந்த பின்னரே நாட்டை விட்டு வெளியேறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்
 
மேலும் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியே வரும்போது பணம் எதுவும் எடுத்துக் கொண்டு வரவில்லை என்றும் அவர் கூறினார். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் நடந்ததே தற்போது மீண்டும் நடக்கப் போகிறதோ என்ற அச்சம் தனக்கு இருப்பதாகவும் அவர் கூறினார்