தொடர்புடைய செய்திகள்
- விமான நிலையத்தை மூடிய தலீபான்கள்; சிக்கிக் கொண்ட இந்தியர்கள்! – துப்பாக்கி சூட்டால் பரபரப்பு!
- இந்தியர்களை மீட்க ஆப்கானிஸ்தான் செல்கிறது சிறப்பு விமானம் – மத்திய அரசு அறிவிப்பு!
- ஆப்கானிஸ்தான்: தாலிபன்களிடம் காபூல் நகரம் ஒரே நாளில் வீழ்ந்தது எப்படி? அடுத்து நடக்கப் போவது என்ன?
- தலீபான்கள் கையில் ஆப்கன்; விமான நிலையம் ஓடும் மக்கள்! – வைரலாகும் வீடியோ!
- ஆப்கானிஸ்தான் தூதரகத்தை காலி செய்த அமெரிக்கா; மக்களை மீட்க முயற்சி!
இனி இந்த நாடு ஆப்கானிஸ்தான் கிடையாது! – நாட்டின் பெயரை மாற்றிய தலீபான்கள்!
ஆப்கானிஸ்தானை முழுமையாக தலீபான்கள் கைப்பற்றிய நிலையில் நாட்டின் பெயரையே மாற்றியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் தலீபான்கள் கை உயர தொடங்கியது. ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றிய தலீபான்கள் நேற்று தலைநகர் காபூலையும் கைப்பற்றினர். அதை தொடர்ந்து ஆட்சியை விடுத்து தலைமறைவாகியுள்ளார் அந்நாட்டு அதிபர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் வாழும் பிறநாட்டு மக்களை திரும்ப வரும்படி அந்தந்த நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. இதற்காக சிறப்பு விமானங்களை உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் அனுப்ப தொடங்கியுள்ளன. இதனால் வேறு நாடுகளை சேர்ந்த பல்லாயிர கணக்கான மக்கள் ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் கும்பல் கும்பலாக இரவிலிருந்து தங்கள் நாட்டு விமானங்களுக்காக காத்திருக்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் பெயரை மாற்றியுள்ளது தலீபான்கள் அமைப்பு. இனி ஆப்கானிஸ்தான் என்பதற்கு பதிலாக இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான் என்று அழைக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
