ஒருநாளைக்கு ஒரு லட்சம் கொரோனா பாதிப்புகள்! அமெரிக்காவை உலுக்கும் நான்காவது அலை!
அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்த கொரோனா அலை ஏற்படுவது கவலை அளிக்க கூடியதாக உள்ளது.
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி பெரும்பாலும் போடப்பட்ட நிலையில் தளர்வுகள் அமலுக்கு வந்தது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படும் நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் பல மாகாணங்களில் அமலுக்கு வந்துள்ளது. இந்த நான்காவது அலையால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.