முன்னேறி வரும் தாலிபன்கள் - ஆஃப்கன் ராணுவத் தளபதி மாற்றம்
ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் தொடர்ந்து முன்னேறி வரும் சூழலில் அந்நாட்டு ராணுவ தளபதியை ஆப்கானிஸ்தான் மாற்றியுள்ளது.
அமெரிக்கா தலைமையிலான வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து விலக்கப்பட்ட பின்பு நடந்து வரும் சண்டையில், அந்த நாட்டிலுள்ள முப்பத்தி நான்கு மாகாணங்களில் குறைந்தது ஒன்பது மாகாணங்களின் தலைநகரை தாலிபன்கள் கைப்பற்றியுள்ளனர்.
அரசு ஆதரவு படைகளை ஒன்று திரட்டுவதற்காக ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள நகரான மசார்-இ- ஷரீஃபுக்கு சென்றுள்ளார். இந்தச் சூழ்நிலையில் ராணுவத் தளபதி ஜெனரல் வாலி முகமது அகமதுசாய் மாற்றப்பட்டுள்ள செய்தி பிபிசியிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் ஜூன் மாதம்தான் இந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார். புதிய தளபதி யார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.