சினிமா தியேட்டர்களை திறக்க தாலிபான்கள் அனுமதி
ஒரு ஆண்டிற்கு சினிமா தியேட்டர்களை திறக்க தாலிபான்கள் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகிறது,.
ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்கப் படைகள் வாபஸ் வாங்கியதை அடுத்து, தற்போது, தாலிபான் கள் ஆட்சி நடத்தி வருகின்றனர்.
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் ஆட்சியை கைப்பற்றி ஒரு ஆண்டு காலம் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் பெண்களுக்கும், அங்குப் பணியாற்றுபவர்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்த சம்பவம் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், அவர்கள் ஆட்சிக்கு வந்தபோது, சினிமா தியேட்டர்களையும் மூடினர்.
தற்போது ஒரு ஆண்டிற்கு சினிமா தியேட்டர்களை திறக்க தாலிபான்கள் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகிறது,.
ஆனால், சினிமாவில் பெண்கள் நடிப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். இந்த ஒரு ஆண்டு காலத்திற்குள் சில படங்கள் ரிலீஸாக தயார் நிலையில் உள்ளன.