நாசாவின் ராக்கெட் விண்ணில் பாய்வதில் சிக்கல்: கவுன்ட்-டவுன் திடீர் நிறுத்தம்!
நாசாவின் ராக்கெட் விண்ணில் பாய்வதில் திடீரென சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக கவுண்ட் டவுன் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
மனிதர்களை நிலவுக்கு அனுப்ப அனுப்புவதற்கான ஆர்ட்டெமிஸ்-1 எஸ்எல்எஸ் ராக்கெட் செல்லும் திட்டம் தொடங்கப்பட்டு வரும் 2025ம் ஆண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது
இதற்காக அவர் ஆர்ட்டெமிஸ்-1 எஸ்எல்எஸ் ஒன்று என்ற ராக்கெட்டை நிலவு குறித்து ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட உள்ளது . இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு இந்த ராக்கெட் கிளம்ப கவுன்ட்-டவுன் இருந்த நிலையில் திடீரென கவுன்ட்-டவுன் நிறுத்தப்பட்டுள்ளது
எதிர்பாராத விதமாக சில தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால் 40வது நிமிடத்தில் போது கவுன்ட்-டவுன் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தொழில்நுட்ப கோளாறு தற்போது சரி செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த ராக்கெட் செப்டம்பர் 2 அல்லது 5 ஆகிய தேதிகளில் விண்ணில் பாய்வதை காணலாம் என்று நாசா தெரிவித்துள்ளது