அமேசான் காட்டில் இருந்த கடைசி மனிதர் மரணம்: 26 ஆண்டுகள் தனிமையில் இருந்தவர்!
அமேசான் காட்டில் கடந்த 26 வருடங்களாக மனிதத் தொடர்புகள் இன்றி தனியாக இருந்த கடைசி மனிதர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளன.
அமேசான் காட்டில் பழங்குடியினர் இருந்து வந்த நிலையில் ஒவ்வொருவராக அவர்கள் இறந்து வந்தனர்.
இந்த நிலையில் மனித தொடர்புகள் இல்லாமல் பழங்குடி இனத்தைச் சேர்ந்த கடைசி மனிதர் கடந்த 26 ஆண்டுகளாக எந்தவித தொடர்பும் இல்லாமல் தனியாக வாழ்ந்து வந்தார்கள்
குழிதோண்டி வசித்த இவர் அங்கேயே சடலமாக இருந்தது தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இந்த பழங்குடிகள் 1970களில் இருந்து நிலத்திற்காக கொல்லப்பட்டார்கள் என்றும் 1995ஆம் ஆண்டு 6 பேர் கொல்லப்பட்ட நிலையில் ஒருவர் மட்டுமே உயிரோடு வாழ்ந்து வந்தார் என்றும் கூறப்பட்டது