தைவானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை..!
தைவான் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தைவான் நாட்டில் இருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் இன்று பிற்பகல் 12.14 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்
7.2 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்த நிலையில் அமெரிக்க நிலநடுக்க அறிவியல் மையம் இதுகுறித்து தகவல் தெரிவித்த போது இந்த நிலநடுக்கம் காரணமாக ஜப்பான் நாட்டிற்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது
ஜப்பான் வானிலை மையமும் இந்த எச்சரிக்கையை உறுதிசெய்து உள்ளது என்பதும் ஒகினாவா என்ற மாகாணத்தில் ஒரு மீட்டர் உயரத்தில் சுனாமி அலைகள் வர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது
தைவான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது கட்டிடங்கள் குலுங்கியதாகவும், ரயில்கள் நிலநடுக்கத்தால் ஆடியதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த நிலநடுக்கம் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.