1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (21:19 IST)

சாலைகளில் டிராஃப்பில் நிற்காமல் பறக்க உருவாகியுள்ள பைக்!

america
இந்த  உலக மிக வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. அதற்கேற்ப மக்களும்  ஜெட் வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இவர்களின் முக்கியமான வேலைகளுக்குச் செல்வதில் அதிக இடைஞ்சலாக உள்ளது சாலை  நெரிசல் தான்.

சாலைகளில்,அதிக நேசம் காத்துக் கிடக்கும்போது, நேரம் விரயமாக ஏற்படுவதாக  கருதுபவர்களும் உள்ளனர்.

இந்த நிலையில், இவர்களுக்காகவே  அமெரிக்க வாகனக் கண்காட்சியின் ஒரு பறக்கும் பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு ஸ்டார் ஆப் நிறுவனமான ஏர்வின்ஸ் இந்த பறக்கும் ப பைக்கை உருவாக்கியுள்ளது. இது, 40  நிமிடம் தொடர்ந்து பறக்கும், 99.77 கிமீ வேகத்தில் பறக்கும் திறனைக் கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த பைக் வரும் 2023 ஆம் ஆண்டு அமெரிக்காவில் விற்பனைக்கு வரவுள்ளதாகவும்,   6 கோடியே 2 லட்சம்  என தகவல் வெளியாகிறது.