கொரோனா வைரஸால் இப்படியெல்லாம் நடக்கும்! – 12 ஆண்டுகள் முன்பே சொன்ன எழுத்தாளர்!
தற்போது கொரோனா வைரஸால் உலகமே பீதியில் உறைந்திருக்கும் நிலையில் இதுகுறித்து 12 ஆண்டுகள் முன்பே ஒரு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸால் உலகம் முழுக்க 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான மாற்று மருந்தும் கண்டுபிடிக்கப்படாததால் உலக நாடுகள் உயிர்பலிகளை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றன.
இந்நிலையில் கொரோனா வைரஸ் மற்றும் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என 12 ஆண்டுகளுக்கு முன்பே ஒருவர் எழுதியுள்ளது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 2008ம் ஆண்டு சில்வியா பிரவுன் என்பவர் எழுதிய புத்தகம் “அண்ட் ஆஃப் டேஸ்” (இறுதி நாட்கள்). இந்த புத்தகத்தில் எதிர்காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்ற யூகத்தில் பல விஷயங்களை அவர் எழுதியுள்ளார். அதில் ”2020ம் ஆண்டில் கடுமையான வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி நுரையீரல் மற்றும் மூச்சு குழாய்களை தாக்கும். உலகின் தலைசிறந்த மருத்துவர்களால் கூட இதை கட்டுப்படுத்த முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.
அவர் குறிப்பிட்டது போலவே தற்போது கொரோனா வைரஸின் தாக்கமும் ஒத்துபோவதால் பலருக்கு இது ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது.