திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: புதன், 4 மார்ச் 2020 (15:51 IST)

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு : பாதுகாப்பு வழிமுறைகள் என்ன ?

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு : பாதுகாப்பு வழிமுறைகள் என்ன ?

சீனா தேசத்திலுள்ள வூபே மாகாணத்தில்  கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதலாய் அந்நாட்டில் பல்வேறு மாகாணங்களில் பரவிய இந்த உயிர் கொல்லி வைரஸ் உலகில் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இதுவரை உலகெங்கிலும் மொத்தம் 3000 க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
 
சீனா தேசத்த அடுத்து, அருகே உள்ள தென்கொரியாவிலும் இந்த நோய் வேகமாக பரவி வருகிறது. இத்தாலியாவில் இந்த நோய் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இரானில் 66 ஆக பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
 
அத்துடன் உலக அளவில் 90,000 க்கும் அதிகமானவர்கள் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்தியாவிலும் இந்த உயிர்க் கொல்லி நோய் தாக்கக்கூடும் என பலரும் அச்சம் கொண்டிருந்த நிலையில், பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படதேவையில்லை; பல்வேறு துறை அமைச்சகங்கள் ஒன்றிணைந்து செயல்படுகிறது என அதிகாரிகளுடனான அவச ஆலோசனைக்கு பிறகு நேற்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
 
இந்தியாவில் 28 பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருப்பதாக தகவல் வெளியாகிறது. இதில், 3 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதைக் கண்டுபிடிப்பது கடும் சவாலாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகள், விமானம்,  கப்பல்   போகுவரத்தில் பரவி வருகிறது. இதனால்  பயணம் மேற்கொள்ளவிருந்த 75% பேர் பயணத்தை ரத்து செய்து விட்டனர். வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு பலத்த சோதனை நடத்தப்படுகிறது.  
 
இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 24 ஆம் தேதி ஜ்ப்பானில் தொடங்கவுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. மற்ற நாடுகள் ஒலிம்பிக்கில் பங்கேற்குமா என்பது விவாதப்பொருளாகியுள்ள நிலையில், கொரோனா வைரஸ் கட்டுக்குள் வரவில்லை என்றால் ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாகும் என கூறப்படுகிறது.
 
கொரோனா வைரஸ்  எப்படி பரவுகிறது என்பதையும், அதை எப்படி தடுக்கலாம் என்பதைப் பார்க்கலாம். 
 
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரின் உமிழ்நீர் பட்ட இடத்தில் 48 மணி நேரம் அந்த வைரஸ் உயிருடன் இருக்கும். பாதிக்கப்பட்ட நபரில் உமிழ் நீரில் இருந்து பரவும் அபாயம் உள்ளதால் அவரிடம் இருந்து 2 மீட்டர் இடைவெளி விட்டு இருப்பது நல்லது.
 
வைரஸ் தாக்கிய நபரை தொடுதல் கூடாது.
 
கொரோனா வைரஸ் தாக்குதலின் அறிகுறிகள்:
 
வறட்டு இருமல், மூச்சுத் தினறல், உடல் வலி, காய்ச்சல்,  தலைவலி,  தொண்டை வலி, போன்ற பாதிப்புகள் இருக்கும்.
 
கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு நிமோனியா, கிட்னி பாதிப்புகள் உருவாகலாம்.
இந்த வைரஸ் தாக்காமல் தற்காத்து கொள்வது எப்படி ?
 
கைகளை நன்றாக கழுவாமல் கண்கள் மூக்கு வாய் அருகே கொண்டு செல்லக்கூடாது.
 
அடிக்கடி கைகளைக் கழுக வேண்டும். கைகளை மட்டும் 20 விநாடிகள் வரை நன்றாக கழுவ வேண்டும்.
 
உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் பொதுஇடங்களுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும்.
 
ஏற்கனவே பயன்படுத்திய முகக்கவசங்களை மூடியுடன் கூடிய குப்பைத் தொட்டியில் போட வேண்டும். குறிப்பாக சளியால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் அதை ஒரு நாள் மட்டுமே அணிய வேண்டும். 
இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு : பாதுகாப்பு வழிமுறைகள் என்ன ?
காய்ச்சல், சளி ஏற்பட்டால் உடனே மருத்துவர்களை அணுக வேண்டும்.
 
பாதிக்கப்பட்டவர் சாப்பிட்ட உணவை சாப்பிடக்கூடாது. அதேபோல் உடல் நிலை பாதிக்கப்பட்டவரின் உடைகளை தொடக்கூடாது போன்ற பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொண்டால் கொரோனா வைரஸில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள முடியும் என மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.