1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 4 மார்ச் 2020 (13:22 IST)

யாரும் ஆபீஸுக்கு வர வேண்டாம்! கொரோனாவால் உஷாரான ஐ.டி. கம்பெனி!

ஐதராபாத்தை சேர்ந்த ஐடி ஊழியருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அந்த நிறுவனம் தனது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் 28 பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. துபாயிலிருந்து ஐதராபாத் வந்த ஐடி ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் பணிபுரியும் ஐடி நிறுவனம் முன்னெச்சரிக்கையாக பணியாளர்களை வீட்டிலிருந்தே பணி புரிய சொல்லி உத்தரவிட்டுள்ளது. மேலும் ஊழியர்கள் யாருக்காவது உடல்நல குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும் அறிவுறுத்தியுள்ளது.

இதுதவிர அந்த நபருடன் விமானத்தில் அருகில் பயணித்தவர்கள், அவரது வீட்டார் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அவரது வாழ்ந்த பகுதியை சேர்ந்த பலருக்கும் தொற்று இருக்கிறதா என்பது குறித்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.