வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 26 ஏப்ரல் 2018 (19:10 IST)

9 நிமிடம் நிரில் மூழ்கி உயிர் பிழைத்த அதிசய சிறுவன்

அமெரிக்காவில் சிறுவன் ஒருவன் 9 நிமிடங்கள் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிர்பிழைத்த சம்பவம் அனைவரையும் ஆச்சிரியப்படுத்தியுள்ளது.
 
அமெரிக்காவில் உள்ள அவிஸ்டா சொகுசு விடுதியில் 12 வயது சிறுவன் ஒருவன் தனது நண்பனுடன் நீச்சல் குளத்தில் குளித்துள்ளான். அப்போது அவனது கால் தண்ணீர் வெளியேறும் ஒட்டையில் சிக்கியுள்ளது. 
 
இதனால் அந்த சிறுவன் தவித்துள்ளான். உடனே அவனது நண்பன் அங்குள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளான். அனைவரும் அந்த சிறுவனை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால், அந்த சிறுவனை காப்பாற்ற முடியவில்லை.
 
பின்னர் அங்கிருந்த பாதுகாப்பு குழு ஒன்று சிறுவனை 9 நிமிடங்கள் கழித்து நீச்சள் குளத்தில் இருந்து காப்பாற்றியுள்ளது. இதனையடுத்து, சிறுவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.