1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (14:52 IST)

8 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 13 வயது சிறுவன்!

உத்தரபிரதேச மாநிலத்தில் 8 வயது சிறுமியை 13 வயது சிறுவன் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
உத்தரபிரதேச மாநிலம் பெரெய்லி அருகே உள்ள கிராமத்தில் 13 வயது சிறுவன் 8 வயது சிறுமியை தோட்டத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி காவல்துறையினர் அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தினர். அந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.
 
இதையடுத்து அந்த சிறுவனை காவல்துறையினர் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.